Friday, July 23, 2010

Good Poem...

பூவே !

இந்த கவிதை உனக்காக இல்லை

உன்னைபோல் ஒரு பூவிற்காக !


பூவே !
உன்னை அழகாய் பூக்கவைத்தது
உன்னை சுமக்கும் செடிதான் !


உன்னை சுமந்தவளுக்கு
உன் மீது உள்ள பாசத்தை விட !


உனக்கு ! உன்னை சுமந்தவல்மேல்
உயிரையும் தாண்டிய பாசம் !


ஆம் ! செடி வாடும்போது
அழகாய் பூத்த பூவும் வாடும் !


பூவே நீ வாடும்போது உன்னை சுமந்த
செடி வாடியதாக கதைகள் கூட இல்லை !


நீ உதிர்ந்த உடன் உன்னைப்போல்
ஆயிரம் அழகான பூக்களை பூக்க செய்து !


தான் ஆசைப்பட்டதை போல் அழகாய்
தன்னை மீண்டும் அலங்கரித்துக்கொள்ளும் !


உன் அருமை தெரியாத இடத்தில் நீ பூத்துவிட்டாய்
உன்னைப்போல் ஒரு பூவுக்காக ஏங்கும் இந்த இதயம் இருப்பது தெரியாமல் ...